.
welcome to my web site, Please write your comments for my future life

Thursday, January 12, 2012

இறுதிக் குரல்

அனைவருக்கும் தெரிந்து போன விடயங்களில் ஒன்றுதான் தமிழ் சமூகம் சந்தித்த மிகப்பெரிய யுத்தம். அண்மைக் காலத்தில் நடந்தேரிய கோரயுத்தத்தால் காணாமல் போனவர்கள், இருந்தும் இல்லாமல், இதுவரை யாரும் அறிந்திராத அதிர்ச்சி தகவல் என்று பல பல கதைகளைச் சொல்லிக் கொண்டு காலத்தின் கரிசணையில் தமிழ் மக்களையும் காயப்படுத்தி வெந்து நொந்து அழுகையின் கண்ணீரில் சிறு ஆறுதலாவது கடைசியாகக்  கிடைக்கும் என்றால் எதுவுமே எழுத்துக்களால் என்னால் சொல்லமுடியாத ஒரு அவஸ்தையான நிலைதான் எமக்கு இப்பவும் பாடங்களாக இருந்து வருகின்றது.

எத்தனை தடவைகள் துன்பங்கள் அத்தனையும் தமிழ் மக்களுக்கு இன்பங்கள் என்று சொல்லிச் சொல்லியே காலங்கள் எல்லாவற்றையும் அர்த்தமற்றதாக்கி எல்லோரையும் அனாதரவற்ற ஆட்களாக மாற்றிவிட்ட யுத்தம் கொடுமையிலும் கொடுமை. யாருமே அறிந்திரராத யாருக்கும் இலகுவில் புரிந்துவிடாத காலமாகத்தான் இறுதி யுத்தமும் அமைந்திருந்தது. " உன்னைச் சொல்லி குற்றமில்லை என்னைச் சொல்லிக் குற்றமில்லை காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி " என்று சொல்லியே அதிகப் பேர் ஆறுதல் அடைந்ததுமுண்டு. அத்தனையும் காயப்பட்ட நெஞ்சத்துக்கு கிடைத்த நோபல் பரிசு.

எழுத்துக்களால் எல்லாவற்றையும் சொல்லிவிட முடியாது என்பதால் சிறு உணர்வுகள், உணர்ச்சிகள் அனைத்தையும் நிரப்பி வரைந்த ஓவியம் இது. கொடுமையின் கணப்பொழுதுகளையும், கடைசி நேரங்கள் சொல்லிப்போன மக்களின் துன்பங்களையும் சின்னதாகவே சொல்லிக் கொள்கின்ற எனது வரைதல் அனைவருக்கும் சில கருத்துக்களை காலத்தின் வெளிகளில் வலிகளை நிரப்பியபடி வாழ்ந்துவரும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை என்றே நினைக்கிறேன்.

No comments:

Post a Comment

Powered by Blogger.