இவ்வாறு இந்தக் கொலவெறி படும் பாடு என்னவென்று சொல்வது. உலகம் முழுவதும் சக்க போடு போடுவதால் தனுஸ் ரசிகர்கள் சந்தோசம் கொண்டாடினாலும் மறுபக்கத்தில் இதற்கு எதிரான பாடல்களும் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன. இவ்வாறான நிலையில் தனுஸ்க்கு அதிகபடியான நெருக்குவாரங்கள் தற்பொழுது எழுந்த வண்ணமே இருக்கின்றது. இது தனுஸ் ரசிகர்களுக்கு மற்றுமொறு தலையிடியைத் தந்திருக்கின்றது.
என்னதான் அவர் தங்க விருது வேண்டினாலும் தழிலுக்கு அவர் செய்ய துரோகம்தனை தமிழ் உலகம் பார்த்துவிட்டு சும்மாதான் இருந்திடுமா..? தமிழ் படங்களில் நடித்து தமிழர்கள் பார்வைக்கும், அதிகமான தமிழ் ரசிகர்கள் பார்ப்பதற்கும் விடுகின்றவேளை பின் விளைவுகளையும் பார்த்திருக்க வேண்டுமல்லவா..?

இன்று அதிகமான சிறுவர்கள் தின்று மென்றுகொண்டிருக்கும் பாடல்களில் இது முதன்மையானதாக திகழ்வதால் வளர்கின்ற பயிர்களுக்கு தமிழ் தாகத்தை விதைப்பதைவிடுத்து ஆங்கில மோகத்தை அப்படியே அள்ளிப் பருக்கியிருப்பது அநியாயம் என்றுதான் புத்தி ஜீவிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
எது எப்படியோ.. இனிவரும் காலங்கள் எத்தனை எதிர்ப்புக்களை இப்பாடல் சம்பாதிக்கும் என்பது பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். மொத்தத்தில் இந்தக் கொலை வெறி தமிழ் மேல் விழுந்த வெறி என்றுதான் சொல்ல முடியும்.
No comments:
Post a Comment