"நம்பினால் நம்புங்கள்" என்னடா இது சீ தமிழ் தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிபோல இருக்கு என்றுகூட நினைக்கலாம். அப்படி நீங்கள் நினைத்தாலும் தவறில்லை. ஆனால் நான் இங்கு சொல்லப் போவது அதையல்ல. இது கதையல்ல நிஜம்.
மனிதன் எவ்வளவுதான் புதிய தொழில்நுட்பம், நவீனமயம் என்று சொல்லிக் கொண்டிருந்தாலும் அவனால் இயற்கையின் மாறுதலுக்கும் அதனுடைய சீற்றத்துக்கும் தலை குனியாதவர்கள் யாருமே இல்லை என்றே சொல்லலாம். இந்த மாறுதலுக்கும் சீற்றத்துக்கும் என்னதான் மனிதன் செய்தான்..? வேறு வழிகளைக் கண்டுபிடித்தானா..? சே... சே... எதுவுமே கண்டுபிடித்து அதனை நிறுத்திவிட முடியாது. காலத்தின் நகர்வுகளில் கடந்த செல்கின்ற ஆபத்துக்களை மிக இலகுவில் எவரும் சொல்லிவிடமுடியாது. ஆனால் இயற்கையின் மாறுதல்கள் மட்டும் அதனை சற்றே சொல்லிவிடத்தான் செய்து விடுகின்றது என்றால் மிகையாகாது. 2004 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மட்டக்களப்பு கல்லடி வாவியில் பலவர்ணப் பாம்புகள் வந்தது. அதனை வினோதமாக பார்த்தவர்களும் படம் பிடித்தவர்கள்தான் அதிகம் பேர். அந்தப் படங்களில் பாம்புகள் இல்லாமல் போனதும் படம் படித்தவர்களை அது அதிர்ச்சியில் ஆழ்த்தியதும் ஒரு புறமிருக்க நாவலடி காயத்திரி பீடத்தில் நடந்தேறிய சில தெய்வீகச் சம்பங்களும் எதையோ ஆபத்தை உண்டுபண்ணும் என்று மக்கள் மத்தியில் சில கருத்துக்கள் இருந்து வந்தது யாவரும் அறிந்ததே. ஆனாலும் அதனை சிலர் நம்பாமல் வேறு விதன்டாவாதக் கதைகளைச் சொல்லியே காலத்தையும் ஓட்டினர். ஆனால் யாருமே எதிர்பார்த்தராத "சுனாமி" என்ற பேரலைகளின் தாக்குதலில் இலங்கை மட்டுமல்ல உலகப்படமே உருக்குலைந்து போனதை யாரும் மறக்க மாட்டார்கள். அதனுடைய தழும்பு ஆறிப் போயிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் நான் மீண்டுமாக அதில் குத்தி வேதனைகளை உண்டுபண்ண விரும்பவில்லை. இருந்தாலும் நான் ஒன்றை மட்டும் கோடிட்டுக் காட்ட விரும்புகின்றேன்.
இலங்கையில் பல பாகங்களில் வினோதச் சம்பங்கள் அதிகரித்திருந்த காலங்களில்தான் “சுனாமி” இலங்கையின் கிழக்கு கரையோரங்களை அதிகளவில் தாக்கியது. அதன் பின்புதான் மக்களால் “மட்டு வாவி ஒரு தீர்க்கதரிசி” என்று அர்த்தப்பட்டு அழைக்கப்படக் காரணமானது.
அதுவும் அண்மையில்; கல்லடி வாவியில் பல வர்ணப் பாம்புகளின் வருகை எல்லா மக்களையும் வேடிக்கைக்கைக்கும் அதிர்ச்சியளிக்கும் வகைக்கும் கொண்டு சென்றது. பல வர்ணப் பாம்புகளின் (மீன் என்று சொல்லிக் கொள்கின்ற ) வருகைக்குப் பின்னர் பெரிய கல்லாறில் ஒரு வீட்டில் சாயி பாபாவின் படங்களிலிருந்து விபூதி படிந்திருந்ததும் பல மக்களின் எண்ணங்களில் மீண்டுமொரு அழிவை எதிர்பார்த்திருந்த அச்சத்தோடு அதனை மறந்தே போனார்கள். இந்தச் சந்தர்பத்தில் இது பாம்பு அல்ல மீனினம் என்றும் இது இப்போது மட்டுமல்ல வழமையாக வருவதுதான் என்றும் சொல்லி சிலர் தங்களை பெரியாட்கள் என நினைத்து மார்பும் தட்டிக் கொண்டார்கள். இவ்வாறு ஒரு சிலர் இப்படியிருக்க பல பேர் எதுவும் நடந்தேறிவிடுமோ என்று அச்சத்தின் மனதோடே வாழ்ந்தும் வந்தது நாம் அறிந்ததே. நாங்கள் ஒரு விடயத்தை இலகுவில் சொல்லிவிட அதனை ஏற்பவர்கள் ஒருபுறமிருக்க மறுபுறம் மறுப்பவர்களும் சமூகத்தில் இருக்கத்தான் செய்வார்கள்.
என்ன செய்வது… பாம்புகளின் வருகையில் அச்சம் கொண்ட மக்கள் இப்போது கூறிவருகின்ற ஒரே உண்மை “நாங்கள் அப்போதே சொல்லியிருந்தோம் அழிவொன்று நடக்கப் போகின்றது என்று” அதனை இன்று சந்தித்திருக்கின்றோம்.. என்று கண்ணீர் கதை சொல்லும் போது விஞ்ஞானம் எங்கே போனது என்று மெஞ்ஞானம் கேட்கிறதை என்னால் சொல்லாமல் இருந்துவிடமுடியாது….? 1959 ஆண்டுக்குப் பின் மீண்டுமொரு வரலாறு காணாத வெள்ளப்பெருக்கை இன்று இலங்கை மட்டுமல்ல அவுஸ்ரேலியாவும் சந்தித்திருக்கிறது. இந்த எதிர்வு கூறல் என்பது இலங்கைக்கு மட்டுமல்ல உலகத்துக்கும்தான் என்று நீங்கள் என்னிடம் கேட்டுவிடமுடியும். நான் அந்தளவுக்கு சொல்லிவிடும் அளவுக்கு வரவில்லை. ஆனால் ஒன்றே ஒன்று இந்த இடத்தில் சொல்லவேண்டும் மட்டு வாவியில் நடந்தேறும் சம்பங்கள் இலங்கையில் அதுவும் மட்டக்களப்பில் பெரும் பாதிப்பை உண்டு பண்ணும் என்பதைத்தான் சொல்லிவிடுகின்றது என்பதை என்னால்; தெளிவாகச் சொல்லிவிடலாம். இப்போது நடந்து கொண்டிருக்கும் வெள்ள அனர்த்தம் மட்டக்களப்பு, அம்பாறை, பொலனறுவை, அனுராதபுரம், திருகோணமலை போன்ற பல கிழக்குப் பிரதேசங்களை அதிகம் பாதித்திருப்பதை நீங்களும் நானும் அறிவோம். இப்போது நீங்கள் என்ன சொல்லப் போகின்றீர்கள்….???
வாழ்வா..? சாவா..? வாழ்க்கைதான் தொடர்ந்தும் நோவா..? எப்படிச் சொல்லிவிடமுடியும். கண்ணீர் கரைந்து கடலும் இரைந்து வாழ்விடமெல்லாம் கப்பலோடும் அளவுக்கு வெள்ளம் வீடுகளை நிரப்பிய படியிருக்கின்றது. மழையும் ஓய்ந்த பாடில்லை. கைகளை மட்டும் உயர்த்தியபடியிருக்க நீரின் உயரங்கள் கைகளை மறைக்கும் அளவுக்கு அவலங்கள் தொடர்ந்த வண்ணமுள்ளன. “தரை மேல் பிறக்கவைத்தான் எங்களை த(க)ண்ணீரில் மிதக்கவைத்தான்”. படைத்தவன் பார்த்திருக்க அவனைத் தாண்டி நாங்கள் என்னதான் செய்ய முடியும். அவனை வேண்டுவதைத் தவிர வேறு வழி எதுவும் தெரியவில்லை. மழை ஓய்ந்து மக்கள் மீண்டுமாக சொந்த இடம் திரும்பி மகிழ்ச்சியாக வாழவேண்டும். அதுதான் அனைவரினதும் அவா..!
No comments:
Post a Comment